திருமூர்த்தி அணையில் வண்டல் மண் எடுக்கும் அளவை அதிகப்படுத்த வேண்டும்'


திருமூர்த்தி அணையில் வண்டல் மண் எடுக்கும் அளவை அதிகப்படுத்த வேண்டும்
x

திருமூர்த்தி அணையில் வண்டல் மண் எடுக்கும் அளவை அதிகப்படுத்த வேண்டும்’

திருப்பூர்

திருப்பூர்

போதுமான அளவு இருப்பதால், திருமூர்த்தி அணையில் வண்டல் மண் எடுக்கும் அளவை அதிகப்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் கிறிஸ்துராஜிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

வண்டல் மண்

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்து முறையிட்டனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் மதுசூதனன்:-

திருமூர்த்திமலையில் வண்டல் மண் 34 ஆயிரம் கன மீட்டர் அளவுக்கு எடுத்து பயன்படுத்துவதற்கு கடந்த ஆண்டு அனுமதி வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு எடுத்தது போக மீதம் உள்ள 17 ஆயிரம் கனமீட்டர் அளவுக்கான மண்ணை எடுக்க கலெக்டர் தற்போது அனுமதி வழங்கியதற்கு நன்றி. அணையில் மண் அள்ள அனுமதி கேட்ட விவசாயிகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. மண் எடுக்க ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட அளவு போதுமானதாக இல்லை. எனவே விவசாயிகளின் நலன் கருதி திருமூர்த்தி அணையில் இருந்து போதுமான அளவு வண்டல் மண் எடுக்க தொடர்ந்து அனுமதி வழங்க வேண்டும்.

மேலும் பெரியவாளவாடி, நடுக்குட்டை, தேவனூர்புதூர், நவக்கரை ஓடை, சின்னப்பாப்பனூத்து, செங்குட்டை, கே.ரெட்டிப்பாளையம் குட்டை, சர்க்கார்புதூர், பீச்சாங்குட்டை, தின்னப்பட்டி குட்டை ஆகியவற்றிலும் வண்டல் மண் அள்ள அனுமதிக்க வேண்டும். மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிக்கு சாலை அமைக்க நடவடிக்கை மேற்கொண்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு நன்றி. உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் கொப்பரை கொள்முதல் செய்வதில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுகிறார்கள். தேவையானவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து கொள்முதல் செய்கிறார்கள். இதை அதிகாரிகள் கவனிக்க வேண்டும்.

கூடுதல் ஆசிரியர்

பரமசிவம் (தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கம்) :-

திருமூர்த்தி அணையில் வண்டல் மண் அள்ளும் நேரத்தை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை அனுமதிக்க வேண்டும். வண்டல் மண் அதிகம் இருப்பதாலும், விவசாயிகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாலும் மண் எடுக்கும் அளவை அதிகரிக்க வேண்டும். விரைந்து அனுமதி வழங்கினால் மண் எடுக்க வசதியாக அமையும்.

உடுக்கம்பாளையம் தொடக்கப்பள்ளிக்கு தேவையான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். ஜம்புக்கல் கரடு மலைப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

கலெக்டர் கிறிஸ்துராஜ் பேசும்போது,' திருமூர்த்தி அணையில் மண் எடுக்கும் நேரம் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை எடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மண் எடுக்கும் பணியை வருவாய்த்துறையினர் கண்காணிக்க வேண்டும்' என்றார்.

------------


Next Story