போலி முத்திரையிட்ட9 கிலோ வெள்ளி கொலுசுகள் பறிமுதல்


போலி முத்திரையிட்ட9 கிலோ வெள்ளி கொலுசுகள் பறிமுதல்
x

திருச்செங்கோட்டில் போலி முத்திரையிட்ட9 கிலோ வெள்ளி கொலுசுகளை இந்திய தர நிர்ணய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நாமக்கல்

எலச்சிபாளையம்

இந்திய தர நிர்ணய அமைவன (பி.ஐ.எஸ்.) கோவை கிளை அலுவலகத்தின் முதுநிலை இயக்குனர் கோபிநாத் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் கடந்த சில நாட்களுக்கு முன் திருச்செங்கோடு பகுதியில் ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது திருச்செங்கோடு தேரடி வீதியில் பி.ஐ.எஸ். உரிமம் இல்லாமல் ஒரு நகை கடையில் ஹால்மார்க் முத்திரைகளை தங்கம், வெள்ளி நகைகளுக்கு போலி ஹால்மார்க் முத்திரை இட்டு வழங்குவது தெரிய வந்தது. அந்த நகைக்கடைக்குள் அதிகாரிகள் குழுவினர் சென்று அதிரடியாக சோதனை செய்தனர். அதில் இந்திய தர நிர்ணய அமைவன அலுவலகத்தின் உரிய உரிமம் பெறாமல் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளுக்கு போலி ஹால்மார்க் முத்திரை இட்டு வழங்கி வந்தது தெரிய வந்தது. மேலும் அந்த நகைக்கடையில் உரிமம் இன்றி ஹால்மார்க் முத்திரை இடப்பட்ட 9.7 கிலோ வெள்ளி கொலுசுகள் இருந்தன. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த நகைக்கடை நடத்தி வந்தவர்கள் மீது பி.ஐ.எஸ். வழக்கு நடவடிக்கை எடுத்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட 9.7 கிலோ வெள்ளி கொலுசுகளையும் கோவை நீதிமன்றத்தில் ஒப்படைத்து வழக்கின் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story