சிம்கோ காலி பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு


சிம்கோ காலி பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு
x

வேலூரில் சிம்கோ காலி பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு நடைபெற்றது.

வேலூர்

தென்னிந்திய பன்மாநில வேளாண்மை கூட்டுறவு சங்கம் (சிம்கோ) உள்ளது. இந்த சங்கத்தில் கண்காணிப்பாளர், கணக்காளர், கிளை மேலாளர், விற்பனையாளர், அலுவலக உதவியாளர் என காலி பணியிடங்கள் உள்ளன. இந்த காலி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு வேலூரில் உள்ள வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி, தேசியா மேல்நிலைப்பள்ளி, தொரப்பாடி அரசினர் மேல்நிலைப்பள்ளி உள்பட 14 மையங்களில் நடந்தது. எழுத்து தேர்வு காலை 10 மணி முதல் 11.30 மணி வரையும், பகல் 2 மணி முதல் 3.30 மணி வரையும் நடந்தது. தேர்வில் பங்கேற்க 5,600 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் சுமார் 4 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர்.

தேர்வு மையங்களை சிம்கோ மேலாண்மை இயக்குனர் பி.கிருஷ்ணன் பார்வையிட்டார்.


Next Story