நூலகத்துறை சார்பில் சிந்தனை முற்றம் நிகழ்ச்சி


நூலகத்துறை சார்பில் சிந்தனை முற்றம் நிகழ்ச்சி
x

நூலகத்துறை சார்பில் சிந்தனை முற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.

கரூர்

கரூர் மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகர் வட்டம் சார்பில் சிந்தனை முற்றம் மற்றும் நூலக தினவிழா மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்றது. இதற்கு வாசகர் வட்ட தலைவர் சங்கர் வரவேற்று பேசினார். மாவட்ட நூலக அலுவலர் (பொறுப்பு) சிவக்குமார் முன்னிலை வகித்தார். பொது நூலகத்துறை துணை இயக்குனர் இளங்கோ சந்திரகுமார் கலந்து கொண்டு நூலகர்களை பாராட்டி பேசினார். கவிஞர் நந்தலாலா கலந்து கொண்டு ஈரம் கசியும் கதைகள் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். இதில் பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story