பட்டதாரி பெண்ணை செல்போனில் படம் பிடித்த பாடகர் கைது
பட்டதாரி பெண்ணை செல்போனில் படம் பிடித்த பாடகர் கைது
ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த பட்டதாரி பெண் ஒருவர் சம்பவத்தன்று ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு ஒரு பயிற்சிக்காக சென்றார். பின்னர் மாலையில் வீடு திரும்புவதற்காக ஒரத்தநாடு பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர் செல்போனை காதில் வைத்துக்கொண்டு பேசுவது போல் பஸ்சுக்காக காத்திருந்த பட்டதாரி பெண்ணை படம் பிடித்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண், தன்னை செல்போனில் படம் பிடித்த நபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் அவரது கையில் வைத்திருந்த செல்போனை பிடுங்கி கொண்டு, அருகில் இருந்த ஒரத்தநாடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு நேரில் சென்று இதுகுறித்து முறையிட்டார். இதுகுறித்து ஒரத்தநாடு மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பட்டதாரி பெண்ணை படம் பிடித்தவர் தென்னமநாடு அய்யனார் கோவில் தெருவை சேர்ந்த ராமன்(வயது 51) என்பதும், இவர் இன்னிசை கச்சேரி பாடகர் என்பதும் தெரிய வந்தது. இதுகுறித்து பட்டதாரி பெண் கொடுத்த புகாரின் பேரில் ஒரத்தநாடு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.