தொடர்ந்து பயிர்களை சேதப்படுத்தி வரும் ஒற்றைக் கொம்பு யானை


தொடர்ந்து பயிர்களை சேதப்படுத்தி வரும் ஒற்றைக் கொம்பு யானை
x

காவலூர் பகுதியில் ஒற்றைக் கொம்பு யானை பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

திருப்பத்தூர்

வாணியம்பாடி

திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயத்தை அடுத்த காவலூர், ஜமுனாமத்தூர் மலைப்பகுதியில் ஒற்றைக் கொம்பு யானை ஒன்று விவசாய நிலத்தில் புகுந்து பயிர்களை சேதம் ஏற்படுத்தி வருகிறது. 3- வந்து நாளாக காவலூர் அடுத்த நாயக்கனூர், அருணாசல கொல்லகொட்டாய் பகுதியில் உள்ள விவசாயபயிர்களை சேதப்படுத்தியது. கோவிந்தராஜ், சுப்பிரமணி, கோவிந்தன் உள்ளிட்ட விவசாயிகளின் நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த நெல், கேழ்வரகு, வாழை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தியது.

யானையை காட்டுக்குள் விரட்ட விவசாயிகள் முயற்சி செய்தும் முடியவில்லை. யானையை காட்டுக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story