நெசவாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்


நெசவாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
x

நெசவாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள செங்குந்தபுரம் 4-வது குறுக்கு தெருவில், செங்குந்தர் பருத்தி பட்டு நெசவாளர்கள் சங்கம் உள்ளது. இந்த சங்கத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்நிலையில் சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை அனைவரும் பாவு வாங்கி புடவை நெய்து வந்த நிலையில், ஒரு சிலருக்கு குடும்ப சூழ்நிலை காரணமாகவும், உடல் நலக்குறைவு காரணமாகவும் புடவை நெய்ய முடியாத நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 1 மாதத்திற்கும் மேலாக பட்டு நெய்வதற்கு பாவு வாங்க வந்தபோது, கூட்டுறவு சொசைட்டி உங்களை அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கி விட்டனர். ஆகையால் பாவு இல்லை என கூறினர். இதனையடுத்து தொடர்ந்து ஒரு மாதமாக இழுத்தடிப்பு செய்தும் வந்தனர். நீக்கம் செய்யப்பட்டதற்கு எந்தவித முன் அறிவிப்பு மற்றும் காரணம் வழங்கவில்லை என கூறி ஆத்திரமடைந்த நெசவாளர்கள் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்க அலுவலகத்தில் சுமார் 10 பேர் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து கூட்டுறவு சொசைட்டி தலைவர் லலிதா புருஷோத்தமன் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி 4 நாட்களுக்குள் கூட்டத்தை கூட்டி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதில் சமாதானம் அடைந்த அவர்கள் கலைந்து சென்றனர்.


Next Story