அரசு கல்லூரி மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்


அரசு கல்லூரி மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்
x

அரசு கல்லூரி மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்

ராமநாதபுரம்

பரமக்குடி

பரமக்குடி அரசு கல்லூரி வளாகத்தில் பிற்படுத்தப்பட்டோர் நல மாணவிகள் தங்கி படிக்கும் விடுதி உள்ளது. இங்கு அரசு கலைக் கல்லூரி மற்றும் அழகப்பா உறுப்பு அரசு கல்லூரி ஆகியவற்றில் படிக்கும் மாணவிகள் 50-க்கும் மேற்பட்டோர் தங்கி படிக்கின்றனர். அவர்களுக்கு ஒவ்வொரு நாளும் வழங்கப்படும் உணவுகள் குறித்த பட்டியல் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் உள்ளது போல் இல்லாமல் சாதம், குழம்பு, கூட்டு மற்றும் தரமற்ற கோதுமை மாவில் செய்யப்பட்ட உணவுகளை சமைத்து கொடுப்பதாக கூறி அந்த விடுதி மாணவிகள் திடீெரன உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் உணவு உண்ணாமல் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இது பற்றிய தகவல் அறிந்ததும் பரமக்குடி தாசில்தார் தமிம் ராஜா விடுதிக்குச் சென்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மாணவிகள் பல்வேறு புகார் கூறினர். அதை தொடர்ந்து விடுதியில் பணியாற்றிய சமையலர் உடனடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். மேலும் அந்த விடுதியில் தங்கி உள்ள மாணவிகளில் 6 பேர் கொண்ட மெஸ் டீம் ஏற்படுத்தப்பட்டது. தினமும் தயார் செய்யும் உணவு பொருட்களை அவர்களே சரி பார்த்து சமைப்பதற்கு வழங்குவார்கள். மேலும் குடிநீர் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தார். அதன் அடிப்படையில் உள்ளிருப்பு போராட்டம் கைவிடப்பட்டது.


Next Story