ஓமலூர் தாலுகா அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம்


ஓமலூர் தாலுகா அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 21 Jun 2023 12:47 AM IST (Updated: 21 Jun 2023 4:22 PM IST)
t-max-icont-min-icon

ஓமலூர் தாலுகா அலுவலகத்தில் இந்திய குடியரசு கட்சி மற்றும் டாக்டர் அம்பேத்கர் நற்பணி மன்றத்தினர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்

சேலம்

ஓமலூர்:-

தாரமங்கலம் நகராட்சி 12-வது வார்டு டாக்டர் அம்பேத்கர் நகர் பகுதி மக்கள் பயன்படுத்தி வந்த புறம்போக்கு நிலத்தை அதே பகுதியைச் சேர்ந்த தனி நபர் ஆக்கிரமிப்பு செய்து கட்டிடம் கட்டுவதற்கு வருவாய்த்துைறயினா் உடந்தையாக இருந்ததாக கூறி ஓமலூர் தாலுகா அலுவலகத்தில் இந்திய குடியரசு கட்சி (சிவராஜ்) மற்றும் டாக்டர் அம்பேத்கர் நற்பணி மன்றத்தினர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

இதற்கு டாக்டர் அம்பேத்கர் நற்பணி மன்ற தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். நற்பணி மன்ற செயலாளர் சின்ன கண்ணு, பொருளாளர் வேல்முருகன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய குடியரசு கட்சி மாநில தலைவர் கருமலை, மாநில துணைத்தலைவர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கண்டனம் தெரிவித்து பேசினர். இதில் அம்பேத்கர் நற்பணி மன்ற நிர்வாகிகள் ரஞ்சித், கோபி, மாணிக்கம், கரிகாலன், குமரவேல், இந்திய குடியரசு கட்சி மாவட்ட தலைவர் மாணிக்கம், மாவட்ட செயலாளர் கருப்புசாமி, மாவட்ட பொறுப்பாளர் ராஜா, தனசேகர், மகளிர் அணி நிர்வாகிகள் ஜெயசுதா, சாந்தி ஒன்றிய நிர்வாகிகள் காளியப்பன், கண்ணையன், விஜயகாந்த் உள்பட ஏராளமான கலந்து கொண்டனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் வருவாய் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியவுடன் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story