சித்தையன்கோட்டை பேரூராட்சி கூட்டம்

சித்தையன்கோட்டை பேரூராட்சி கூட்டம் நடந்தது.
சித்தையன்கோட்டை பேரூராட்சி கூட்டம் நடந்தது. இதற்கு பேரூராட்சி தலைவர் போதும்பொண்ணு முரளி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஜாகிர்உசேன் முன்னிலை வகித்தார். செயல்அலுவலர் சிவக்குமார் வரவேற்றார்.
சொத்துவரி, காலிமனை வரி சீராய்வு, அத்தியாவசிய பணிகளுக்கான பொருட்கள் கொள்முதல், சுகாதாரம், குடிநீர் வினியோக பணி ஆகியவற்றுக்கான ஒப்பந்தம் பெறுதல் உள்பட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், அ.தி.மு.க. கவுன்சிலர்கள் பேசும்போது, பேரூராட்சியில் நடைபெறும் பணிகள் குறித்த விவரங்கள் கவுன்சிலர்களுக்கு தெரியப்படுத்தவில்லை. பேரூராட்சி நிர்வாகம் தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறது என குற்றம் சாட்டினர். அதற்கு பதில் அளித்து பேரூராட்சி தலைவர் பேசுகையில், பேரூராட்சியில் அத்தியாவசிய பணிகள் தொய்வின்றி நடந்து வருகின்றன. அரசிடம் இருந்து நிதி வரப்பெற்றதும் வளர்ச்சி மற்றும் திட்டப் பணிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றார்.






