மூதாட்டியை வெட்டி கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை சிவகங்கை கோர்ட்டு தீர்ப்பு


மூதாட்டியை வெட்டி கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை  சிவகங்கை கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 16 Sept 2023 12:15 AM IST (Updated: 16 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மூதாட்டியை வெட்டி கொன்ற மகனுக்கு சிவகங்கை கோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்தது.

சிவகங்கை


சிவகங்கை அடுத்த பொன்னாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பூவி அம்மாள் (வயது78). இவருடைய மகன் முருகேசன் (60). முருகேசன் அந்தமானில் வேலை பார்த்துவிட்டு கடந்த 2012-ம் ஆண்டு சொந்த ஊருக்கு வந்தார். இந்த நிலையில் அவர் வேலைக்கு எதுவும் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் அவரது தாயார் பூவி அம்மாள் முருகேசனை வேலைக்கு செல்லும்படி கூறினாராம். இதில் ஏற்பட்ட தகராறில் கடந்த 2017 ஜூன் மாதம் 11-ந் தேதி முருகேசன் அவருடைய தாயார் பூவி அம்மாளை அரிவாளால் வெட்டி கொலை செய்தார். இது குறித்து சிவகங்கை தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து முருகேசனை கைது செய்து அவர் மீது சிவகங்கை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் அழகர்சாமி ஆஜரானார். வழக்கை விசாரித்த முதன்மை அமர்வு நீதிபதி குருமூர்த்தி, முருகேசனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.


Next Story