சிவகங்கை: அரசுப்பேருந்து-லாரி நேருக்கு நேர் மோதி விபத்து - 3 பேர் உயிரிழப்பு


சிவகங்கை: அரசுப்பேருந்து-லாரி நேருக்கு நேர் மோதி விபத்து - 3 பேர் உயிரிழப்பு
x

சிவகங்கை அருகே அரசுப்பேருந்தும் லாரி நேருக்கு நேர் மோதி விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

சிவகங்கை,

சிவகங்கை-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பூவந்தி அருகே அரசு பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தின்போது பஸ்சில் இருந்த பயணிகள் அலறினர். இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், போலீசார் விபத்தில் படுகாயம் அடைந்தோரை மீட்டு சிவகங்கை மற்றும் மதுரைம் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

பின்னர் விபத்தில் சிக்கிய லாரி, பேருந்து ஆகியவை போலீசார் அகற்றினர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





Next Story