திருப்பத்தூர் அருகே கை, கால் நரம்புகளை அறுத்த தலைமை ஆசிரியை கொடூரக் கொலை...!


திருப்பத்தூர் அருகே கை, கால் நரம்புகளை அறுத்த தலைமை ஆசிரியை கொடூரக் கொலை...!
x

சிவகங்கை அருகே தலைமை ஆசிரியை வீட்டில் கை, கால் நரம்புகள் அறுபட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்தூர்,

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் கான்பாநகரில் வசித்து வந்த ரஞ்சிதம், தென்மாபட்டு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

காலை 9 மணி ஆகியும், ரஞ்சிதம் பள்ளிக்கு வராததால், உடன் பணியாற்றும் ஆசிரியர்கள் வீட்டுக்கு வந்து பார்த்தனர். அப்போது, வீட்டின் முன்பக்கம் பூட்டப்பட்டிருந்ததால், வீட்டின் பின்பக்கம் வழியாக சென்று பார்த்தனர். அங்கு, ரஞ்சிதம் வலதுகை நரம்பு, குதிகால் நரம்புகள் அறுத்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.

தகவலறிந்து வந்த போலீசார், ஆய்வு செய்ததில், வீட்டில் சிசிடிவி கேமராவுக்காக பொருத்தப்பட்டிருந்த ஹார்டு டிஸ்க்கை மர்ம நபர்கள் எடுத்துச் சென்றது தெரியவந்தது. ரஞ்சிதம் அணிந்திருந்த 20 பவுன் நகைகளும் காணவில்லை என்பதால் பணத்துக்காக கொலை நடந்திருக்கலாம் என்ற சந்தேகிக்கப்படுகிறது. இதில், வட மாநில கொள்ளையர்களுக்கு தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை செய்து வருகின்றனர்.


Next Story