சிவகிரிகூடலூர் மாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா


சிவகிரிகூடலூர் மாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா
x

பொங்கல் விழா

ஈரோடு

சிவகிரி பேரூராட்சி அலுவலகம் அருகில் பழமை வாய்ந்த கூடலூர் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் பொங்கல் திருவிழா கடந்த மாதம் 5-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து இரவு 8 மணி அளவில் கம்பம் நடப்பட்டது. இந்த கம்பத்துக்கு பெண்கள் தினமும் அதிகாலை புனிதநீர் ஊற்றி வழிபட்டு வந்தனர். மேலும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகத்துடன், அலங்காரம் செய்யப்பட்டது.

நேற்று முன்தினம் காலை 10 மணி அளவில் அக்னிசட்டி, தீர்த்தக்குட ஊர்வலமும், பகல் 1 மணிக்கு அம்மனுக்கு பலவிதமான நறுமணப்பொருட்களினால் அபிஷேகமும் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மாவிளக்கு பூஜை நடைபெற்றது. அப்போது ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர். இரவு 11 மணிக்கு கம்பம் விடுதலும், இன்று (சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவும், அம்மன் ஊஞ்சல் சேவையும் நடைபெற உள்ளது.


Next Story