சிவகாசி பத்திரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்


சிவகாசி பத்திரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
x

சிவகாசி பத்திரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி இந்து நாடார் மகமை பண்டுக்கு சொந்தமான பத்திரகாளியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நாளை (புதன்கிழமை) காலை 9 மணிக்கு நடக்கிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று காலை 5 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, தன பூஜை, ஸ்ரீமகா கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், ஸ்ரீமகா லட்சுமி ஹோமம், பிரம்மசாரி பூஜை ஆகியவை நடைபெற்றது. இதேபோல் இன்று காலை 8 மணிக்கு விக்னேஷ்வரபூஜை, புண்யாகவாசனம், விசேஷ நந்தி பூஜை ஆகியவை நடக்கிறது. மாலை 5 மணிக்கு மேல் யாகசாலை பூஜைகள் நடைபெறுகிறது. கும்பாபிஷேக ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


Next Story