புத்தக கண்காட்சியில் சிவகாசி மாணவர்கள் பங்கேற்பு


புத்தக கண்காட்சியில் சிவகாசி மாணவர்கள் பங்கேற்பு
x

புத்தக கண்காட்சியில் சிவகாசி மாணவர்கள் பங்கேற்றனர்.

விருதுநகர்

சிவகாசி,

விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் முதன்முறையாக புத்தக கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. விருதுநகர் கே.வி.எஸ். மேல்நிலைப்பள்ளியில் கடந்த 17-ந் தேதி தொடங்கிய இந்த புத்தக கண்காட்சி வருகிற 27-ந்தேதி வரை நடக்கிறது. தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் புத்தக கண்காட்சியில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சிவகாசி பகுதியில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் 500 மாணவ, மாணவிகள் நேற்று சிவகாசியில் இருந்து பள்ளி வாகனங்களில் விருதுநகர் புத்தக கண்காட்சிக்கு அழைத்து செல்லப்பட்டனர். இந்த மாணவர்கள் புத்தக கண்காட்சியை பார்வையிட்டனர். முன்னதாக மாணவர்களை வழி அனுப்பும் நிகழ்ச்சியில் அசோகன் எம்.எல்.ஏ., ஆர்.டி.ஓ. விஸ்வநாதன், தாசில்தார் லோகநாதன், காங்கிரஸ் பிரமுகர்கள் சேர்மத்துரை, வக்கீல் காளிராஜ், முத்துமணி, தர்மராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story