நெல்லை மாநகராட்சி புதிய ஆணையாளராக சிவகிருஷ்ணமூர்த்தி பொறுப்பேற்பு


நெல்லை மாநகராட்சி புதிய ஆணையாளராக சிவகிருஷ்ணமூர்த்தி பொறுப்பேற்பு
x

நெல்லை மாநகராட்சி புதிய ஆணையாளராக சிவகிருஷ்ணமூர்த்தி பொறுப்பேற்றுக் கொண்டார்.

திருநெல்வேலி

நெல்லை:

நெல்லை மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணுசந்திரன் சென்னை நகராட்சிகளில் இணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக சிவகிருஷ்ணமூர்த்தி மாநகராட்சி புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டார். புதிய ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தியிடம் நேற்று விஷ்ணுசந்திரன் பொறுப்புகளை ஒப்படைத்தார்.

நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் நாராயணன், உதவி ஆணையாளர்கள் ஐயப்பன், லெனின், உதவி செயற்பொறியாளர்கள் சாந்தி, ராமசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

புதிய ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி கூறுகையில், "நெல்லை மாநகராட்சி ஆணையாளர் பொறுப்பை எனக்கு வழங்கிய தமிழக முதல்-அமைச்சருக்கும், தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நெல்லை மாநகராட்சி பள்ளிகளில் சுகாதார கட்டமைப்பை மேம்படுத்த ஆய்வு மேற்கொள்ளப்படும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சாலை, குடிநீர் வசதிகளை மேம்படுத்த முக்கியத்துவம் அளிக்கப்படும். பிறப்பு, இறப்பு சான்றிதழ் விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

சிவகிருஷ்ணமூர்த்தி 2017-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்று இந்திய ஆட்சிப் பணியில் சேர்ந்தார். இவர் நெல்லை, சேரன்மாதேவியில் உதவி கலெக்டராக பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story