சிவந்தியப்பர் கோவில் கும்பாபிஷேகம்


சிவந்தியப்பர் கோவில் கும்பாபிஷேகம்
x

ஆழ்வார்குறிச்சி சிவந்தியப்பர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

தென்காசி

கடையம்:

ஆழ்வார்குறிச்சி சிவந்தியப்பர்- சிவகாமி அம்பாள் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 3-ந் தேதி தொடங்கியது. இதையொட்டி தினமும் பல்வேறு பூஜைகள் நடந்து வந்தன. நேற்று காலையில் 6-ம் கால யாகசாலை பூஜை மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து கோவில் விமானத்துக்கும், விநாயகர், சிவந்தியப்பர், சிவகாமி அம்பாளுக்கும் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் மதியம் அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story