ஆறு, குளங்களில் குளிக்க செல்லும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய கவனம் செலுத்த வேண்டும்; பெற்றோர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்


ஆறு, குளங்களில் குளிக்க செல்லும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய கவனம் செலுத்த வேண்டும்; பெற்றோர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்
x

ஆறு, குளங்களில் குளிக்க செல்லும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய கவனம் செலுத்த வேண்டும் என தென்காசி கலெக்டர் கோபால சுந்தரராஜ், பெற்றோர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

தென்காசி

தென்காசி:

தென்காசி மாவட்ட கலெக்டர் கோபால சுந்தரராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சமீப காலங்களில் ஆறு, ஏரி மற்றும் குளங்கள் போன்ற நீர் நிலைகளில் குளிக்கச் செல்லும் சிறுவர், சிறுமியர் மற்றும் இளைஞர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன. இதனால் சம்பந்தப்பட்ட குடும்பங்கள் வாழ்நாள் முழுவதும் தீராத துயரில் ஆழ்ந்து விடும் நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே இதில் நாம் அனைவரும் தீவிர அக்கறையும், கவனமும் செலுத்தி இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் ஏற்படாத வண்ணம் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக கிராமப்புற பகுதிகளில் உள்ள நீர் நிலைகளில் சிறுவர்-சிறுமியர் மற்றும் இளைஞர்கள் குளிக்கச் செல்லும்போது பெற்றோர்கள் அல்லது பெரியோர்களின் கண்காணிப்பில் இருக்கவேண்டும், என்றும் அவர்கள் பாதுகாப்பான முறையில் நீர்நிலைகளை பயன்படுத்துவதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story