தொழிலாளர்களுக்கு திறன் பயிற்சி


தொழிலாளர்களுக்கு திறன் பயிற்சி
x
தினத்தந்தி 21 July 2023 12:21 AM IST (Updated: 22 July 2023 4:40 PM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது.

ராணிப்பேட்டை

தமிழ்நாடு கட்டுமான கழகத்தால், கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்களுக்கு 3 மாத கால திறன் பயிற்சி மற்றும் ஒரு வார கால திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.

3 மாத திறன் பயிற்சி எல் அண்ட் டி கட்டுமான திறன் பயிற்சி நிலையத்துடன் இணைந்து நடத்தப்பட உள்ளது. பயிற்சி பெறும் கட்டுமான தொழிலாளர்களின் கல்வித் தகுதி 5-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 மற்றும் ஐ.டி.ஐ. படிப்பு வரை இருக்கலாம். 18 வயதில் இருந்து 40 வயது வரை இருத்தல் வேண்டும். கொத்தனார், பற்றவைப்பவர், மின்சாரபயிற்சி, குழாய் பொருத்துனர், மரவேலை, கம்பிவளைப்பவர் ஆகிய பயிற்சிகள் வழங்கப்படும். கட்டணம் ஏதும் கிடையாது. உணவு, தங்குமிடம் ஆகியவை இலவசமாக வழங்கப்படும்.

ஒருவார கால திறன் மேம்பாட்டு பயிற்சி தமிழ்நாடு கட்டுமான கழகம் மற்றும் எல் அண்ட் டி கட்டுமான திறன் பயிற்சி நிலையம் இணைந்து நடத்த உள்ளன. தமிழ் மொழியில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். வயது 18-க்கு மேல் இருத்தல் வேண்டும். பயிற்சி பெறுபவர் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்து, மூன்று வருடம் உறுப்பினராக இருத்தல் வேண்டும். கொத்தனார், பற்றவைப்பவர், மின்சாரபயிற்சி, குழாய்பொருத்துனர், மரவேலை, கம்பிவளைப்பவர் ஆகிய பயிற்சி வழங்கப்படும்.

இது குறித்து விவரங்கள் அறிய ராணிப்பேட்டை முத்துக்கடையில் அமைந்துள்ள தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தை அணுகலாம்.

இந்த தகவலை தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


Next Story