மண்டை ஓடு, எலும்பு துண்டுகள் கிடைத்தன


மண்டை ஓடு, எலும்பு துண்டுகள் கிடைத்தன
x
தினத்தந்தி 15 Sep 2022 6:45 PM GMT (Updated: 15 Sep 2022 6:46 PM GMT)

ெகாந்தகையில் முதுமக்கள் தாழிகள் திறந்து ஆய்வு செய்யப்பட்டதில் மண்டை ஓடு, எலும்புகள் கிடைத்தன.

சிவகங்கை

திருப்புவனம்,

கீழடி, கொந்தகை, அகரம் ஆகிய பகுதிகளில் அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது. கொந்தகையில் 8-ம் கட்ட அகழாய்வின் போது 4 குழிகள் தோண்டப்பட்டன. இதில் மொத்தம் 57 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன. இதுவரை 35 முதுமக்கள் தாழிகள் திறக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளன.

நேற்று இரவு மாநில தொல்லியல் துறை ஆணையர் (பொறுப்பு) சிவானந்தம் தலைமையில் தொல்லியல் துறையினர் முழுமையாக உள்ள 2 முதுமக்கள் தாழிகளை திறந்து ஆய்வு செய்தனர். அதில் ஒரு முதுமக்கள் தாழியில் மூன்று சுடுமண் பானைகள், மூன்றுசுடுமண் கிண்ணங்கள், இரண்டு சிறிய கிண்ணங்கள், இரண்டு மூடிகள், சிறிது எலும்பு துண்டுகளும் இருந்தது. மற்றொரு முதுமக்கள் தாழியில் மண்டை ஓடு, எலும்பு துண்டுகள், ஒரு சுடுமண் பானை மற்றும் சிறிய பொருட்கள் இருந்தன. இந்த பொருட்கள் ஆய்வுக்கு அனுப்பப்பட உள்ளன. ஆய்வு முடிவுக்கு பிறகுதான் இறந்தவர்கள் எந்த ஆண்டுகள் வாழ்ந்தார்கள் என்பது தெரியவரும்.



Next Story