அம்பேத்கர் குறித்து அவதூறு பேச்சு: விஷ்வ இந்து பரிஷத் முன்னாள் தலைவர் ஆர்பிவிஎஸ் மணியன் கைது.!


அம்பேத்கர் குறித்து அவதூறு பேச்சு: விஷ்வ இந்து பரிஷத் முன்னாள் தலைவர் ஆர்பிவிஎஸ் மணியன் கைது.!
x
தினத்தந்தி 14 Sept 2023 8:09 AM IST (Updated: 14 Sept 2023 11:45 AM IST)
t-max-icont-min-icon

ஆர்பிவிஎஸ் மணியனை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை,

ஆன்மிக சொற்பொழிவாளரும், விஷ்வ இந்து பரிஷத் இயக்கத்தின் முன்னாள் மாநில தலைவருமான ஆர்பிவிஎஸ் மணியனை இன்று அதிகாலை 3.30 மணியளவில் தனிப்படை போலீசர் கைதுசெய்தனர். ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியில் அம்பேத்கரை பற்றி அவதூறாக பேசிய வழக்கில் அவர் தி.நகரில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைதுசெய்யப்பட்டார்.

இவர் அம்பேத்கரை பற்றி அவதூறாக என்ன பேசினார் என்பது பற்றியும், இவர் மீது என்ன வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது என்பது குறித்தும் தெரியவரவில்லை. கைதுசெய்யப்பட்டுள்ள ஆர்பிவிஎஸ் மணியனை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story