கழுத்தை அறுத்து பெண் படுகொலை
அன்னூரில் தனியாக வீட்டில் இருந்த பெண் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டார்.
அன்னூர்
அன்னூரில் தனியாக வீட்டில் இருந்த பெண் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தனியாக வசித்தனர்
கோவையை அடுத்த அன்னூர் ஊராட்சி ஒன்றியம் அன்னூர் மேட்டுப்பாளையம் ஊராட்சி கரையம்பாளையம்புதூரை சேர்ந் தவர் சுப்பிரமணி (வயது61). இவருடைய மனைவி தங்கமணி (54). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
அவர்கள் திருமணம் முடிந்து தங்களின் குடும்பத்தினருடன் தனி யாக வசித்து வருகின்றனர். இதனால் சுப்பிரமணியும், தங்கமணி யும் தனியாக வசித்து வந்தனர். சுப்பிரமணி நேற்று காலை சொந்த வேலையாக வெளியே சென்று விட்டு மாலையில் வீட்டிற்கு திரும்பி வந்தார்.
ரத்த வெள்ளத்தில் கிடந்தார்
அப்போது வீடு திறந்து கிடந்தது. இதனால் அவர் சமையல் அறைக்கு சென்று பார்த்த போது தங்கமணி கழுத்து அறுபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.
இதை பார்த்து அதிர்ச்சி சுப்பிரமணி கதறி துடித்தார். அதை கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்தனர். இது குறித்த தகவ லின் பேரில் அன்னூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்க வில்லை.
நகை, பணம் கொள்ளை போக வில்லை
போலீசார் நடத்திய விசாரணையில், தங்கமணி கொலை செய்யப்பட்ட வீட்டில் இருந்து பணம், நகை எதுவும் கொள்ளை போக வில்லை. இதனால் இந்த கொலை எதற்காக நடைபெற்றது. கொலை செய்தவர்கள் யார்?. நகை, பணம் கொள்ளை அடிக்கப் படாதது போலீசாரின் கவனத்தை திசை திருப்பும் முயற்சியா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை செய்யப்பட்டது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.