கரூர் புத்தக திருவிழாவை முன்னிட்டு தேவாங்கு வன உயிரினத்தை அடையாளப்படுத்தும் உருவப்படம் வெளியீடு


கரூர் புத்தக திருவிழாவை முன்னிட்டு தேவாங்கு வன உயிரினத்தை அடையாளப்படுத்தும் உருவப்படம் வெளியீடு
x

தேவாங்கு வன உயிரினத்தை அடையாளப்படுத்தும் வகையில் ‘நூலன்-நூலி’ என்ற பெயரில் கார்ட்டூன் உருவப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

கரூர்,

கரூர் மாவட்டத்தில் வரும் ஆகஸ்ட் 19-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை 10 நாட்களுக்கு புத்தக திருவிழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு புத்தக திருவிழாவிற்கான அடையாளப் படம்(லோகோ) இன்று வெளியிடப்பட்டது. கரூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் இதனை வெளியிட்டார்.

தேவாங்கு வன உயிரினத்தை அடையாளப்படுத்தும் வகையில் 'நூலன்-நூலி' என்ற பெயரில் இந்த கார்ட்டூன் உருவப்படம் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கலெக்டர் பிரபு சங்கர், பாலின சமத்துவத்தை வெளிப்படுத்தும் விதமாகவும், மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகளை போற்றும் வகையிலும் 'நூலன்-நூலி' கார்ட்டூன் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


Next Story