குறுங்காடுகள் வளர்ப்பு திட்டம்
குறுங்காடுகள் வளர்ப்பு திட்டத்தை கலெக்டர் வளர்மதி தொடங்கி வைத்தார்.
ராணிடெக், சாலிடரிடாட் மற்றும் ஸ்விட்ச் ஆசியா ஆகியவை இணைந்து ராணிப்பேட்டை ராணிடெக் பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய வாளகத்தில் குறுங்காடுகள் வளர்ப்பு திட்டம் தொடங்கப்பட்டது. மாவட்ட கலெக்டர் எஸ்.வளர்மதி, ஸ்விட்ச் ஆசியா கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு நிபுணர் எலியோனோரா அவாக்லியானோ ஆகியோர் தலைமை தாங்கி, மரக்கன்றுகளை நடவு செய்து தொடங்கி வைத்தனர். வேலூர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ரவிச்சந்திரன், ராணிப்பேட்டை மாவட்ட சுற்றுச்சூழல் உதவி பொறியாளர் சந்திரசேகர், மாவட்ட வன அலுவலர் கலாநிதி ஆகியோர் குறுங்காடுகள் வளர்ப்பு திட்டத்திற்காக வனத்துறை சார்பாக 600 மரக்கன்றுகளை வழங்கினர்.
நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை வனச்சரக அலுவலர் சரவணபாபு, ராணிடெக் பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய தலைவர் ரமேஷ்பிரசாத், நிர்வாக இயக்குனர் ஜபருல்லா, பொது மேலாளர் சிவகுமார், சாலிடரிடாட் மேலாளர் சுரில் பன்னிர்செல்வம் மற்றும் நிலையத்தின் அங்கத்தினர்கள், தொழிலதிபர்கள், ஊழியர்கள் இணைந்து நிலைய வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர்.