விவசாயிகளுக்கு சிறுதானிய விழிப்புணர்வு
ராதாபுரத்தில் விவசாயிகளுக்கு சிறுதானிய விழிப்புணர்வு முகாம் நடந்தது.
திருநெல்வேலி
ராதாபுரம்:
ராதாபுரம் வட்டாரம் கஸ்தூரிரெங்கபுரம், ஆமையடி மற்றும் கோட்டைகருங்குளம் கிராமத்தில் வேளாண்மை உதவி இயக்குநர் ஜாஸ்மின் லதா அறிவுறுத்தலின் படி சிறுதானிய இயக்கம் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. வேளாண்மை அலுவலர் சரண்யா, சிறு தானியங்களின் சாகுபடி தொழில் நுட்பம் பற்றி கூறினார். வட்டார தொழில் நுட்ப மேலாளர் ஜாய் பத்ம தினேஷ் வரவேற்றார். சிறு தானியங்களை நேரடியாக விற்பனை செய்யாமல் மதிப்பு கூட்டி விற்பனை செய்யவதன் மூலம் அதிக லாபம் பெறலாம் என்றும், சிறு தானியங்களில் என்னென்ன உணவுகள் செய்யலாம் என்று விளக்கி கூறினார். உதவி தொழில்நுட்ப மேலாளர் சரிகா நன்றி கூறினார். முகாம் ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் லீனஸ் பவுல் துரை மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர் சுபா ஆகியோர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story