சிறுதானிய உணவு கண்காட்சி
மேபீல்டு அரசு பள்ளியில் சிறுதானிய உணவு கண்காட்சி நடந்தது.
கூடலூர்
கூடலூர் தாலுகா தேவர்சோலை அருகே மேபீல்டு பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளி மாணவர்கள் தாங்களே தயாரித்துக் கொண்டு வந்த சிறு தானிய உணவு கண்காட்சி பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. தலைமை ஆசிரியர் பால் விக்டர் தலைமை தாங்கினார். அறிவியல் ஆசிரியர் ஜெசிகா பிரின்சஸ் முன்னிலை வகித்தார். இதில் முளைகட்டிய தானியங்கள், தானிய பொடிகளில் செய்யப்பட்ட உணவு பதார்த்தங்கள் இடம் பெற்றிருந்தது. இதனை மாணவர்கள் ஒரு ரூபாய் கொடுத்து வாங்கி சாப்பிட்டனர். இந்த கண்காட்சியில் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு, சிறு தானியங்கள் உண்பதால் உடல் ஆரோக்கியம் மேம்படுவது குறித்து அறிந்து கொண்டனர். சுகாதார பணியாளர்களும் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் கற்பகவள்ளி, பாபு, பிரோஸ், குமார், சீனிவாசன், பார்வதி, தஸ்னி ஆகியோர் செய்திருந்தனர்.