சிறுதானிய உணவு கண்காட்சி


சிறுதானிய உணவு கண்காட்சி
x
தினத்தந்தி 26 Sept 2023 12:15 AM IST (Updated: 26 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிறுதானிய உணவு கண்காட்சியை கலெக்டர் பார்வையிட்டார்

ராமநாதபுரம்


ராமநாதபுரம் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்துறையின் சார்பில் கர்ப்பிணி பெண்கள் மற்றும் வளர் இளம் பெண்கள் சரியான முறையில் ஊட்டச்சத்து உணவுகள் எடுத்து கொள்ள வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட சத்துணவுகளின் வகைகள் மற்றும் அதன் பயன்கள் குறித்து கண்காட்சி அரங்கு அமைக்கப்பட்டிருந்தது. இதனை கலெக்டர் விஷ்ணு சந்திரன் பார்வையிட்டார். அதனை தொடர்ந்து, சிறுதானியங்கள் உணவின் சிறப்பு அதனால் ஏற்படும் பயன் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வளர் இளம் பெண்கள், கர்ப்பிணிகளுக்கு அந்தந்த காலத்தில் எடுத்து கொள்ள வேண்டிய உணவுகள் மற்றும் அதன் பயன்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும். ஒவ்வொரு பகுதிகளிலும் கள ஆய்வு செய்து குழந்தைகள் முதல் கர்ப்பிணி தாய்மார்கள் வரை கணக்கெடுத்து அவர்களுக்கான மருத்துவ பரிசோதனை மற்றும் சத்தான உணவுகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். எடை குறைவான கர்ப்பிணிகளுக்கு மருத்து ஆலோசனை வழங்க அறிவுறுத்தினார். சிறுதானிய உணவுகளை சாப்பிட கேட்டுக்கொண்டார்.

பொதுமக்கள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள் பார்த்து பயன்பெறும் வகையில் அதிநவீன மின்னணு விளம்பர வாகனத்தின் மூலம் விழிப்புணர்வு குறித்த குறும்படங்கள் திரையிடுவதை கலெக்டர் விஷ்ணு சந்திரன் பார்வையிட்டார். நிகழ்ச்சியில் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் விசுபாபதி, அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story