சிறுதானிய உணவு திருவிழா


சிறுதானிய உணவு திருவிழா
x

சிறுதானிய உணவு திருவிழா நடைபெற்றது.

கரூர்

வெள்ளியணை அருகே உள்ள துளசி கொடும்பு அரசு தொடக்கப்பள்ளியில் சிறுதானிய உணவு திருவிழா நடைபெற்றது. இதற்கு பள்ளியின் தலைமை ஆசிரியை வனிதா தலைமை தாங்கினார். இதில் மாணவர்கள் சிறுதானியங்களை கொண்டு தயார் செய்த சாமை கேசரி, கேழ்வரகு அடை, கொழுக்கட்டை புட்டு, திணைலட்டு, கம்பு உருண்டை, குதிரைவாலி லட்டு உள்ளிட்ட உணவு வகைகளை காட்சி படுத்தியிருந்தனர். இவற்றை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சிறுதானிய உணவு ஆர்வலர் நிர்மலாபாலு பார்வையிட்டு மாணவர்களை பாராட்டினார். பின்னர் அவர் சிறுதானிய உணவுகளின் நன்மைகள் குறித்து மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி ஆசிரியர் செல்வராணி நன்றி கூறினார்.


Next Story