சிறுதானிய உணவகம் அமைக்க மகளிர் சுயஉதவிக்குழு விண்ணப்பிக்கலாம்


சிறுதானிய உணவகம் அமைக்க மகளிர் சுயஉதவிக்குழு விண்ணப்பிக்கலாம்
x

சேலத்தில் சிறுதானிய உணவகம் அமைக்க மகளிர் சுயஉதவிக்குழு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்து உள்ளார்.

சேலம்

சேலம் கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் சிறுதானிய உணவகம் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் பெண்கள் வாழ்வாரதாரம் மேம்படும். அதே போன்று ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத நிலையும் உருவாக்கப்படும். எனவே சிறுதானிய உணவகம் கலெக்டர் அலுவலக வளாகத்திலேயே அமைக்க அறை ஒதுக்கப்பட்டு உள்ளது. எனவே விதிமுறைகளைப் பின்பற்றி மகளிர் சுய உதவிக்குழுக்கள், உற்பத்தியாளர் குழுக்கள், கூட்டமைப்புகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மகளிர் குழு தொடங்கப்பட்டு குறைந்த பட்சம் 2 ஆண்டுகள் முடிந்திருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் குழுவிற்கு உணவகம் வழங்க 11 மாத காலம் மட்டுமே அனுமதி வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் வருகிற 20-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story