பெரியார் பல்கலைக்கழகத்தில்சிறுதானியங்கள் கண்காட்சி


பெரியார் பல்கலைக்கழகத்தில்சிறுதானியங்கள் கண்காட்சி
x

பெரியார் பல்கலைக்கழகத்தில் சிறுதானியங்கள் கண்காட்சி நடந்தது.

சேலம்

கருப்பூர்,

சேலம் பெரியார் பல்கலைக்கழகமும், சந்தியூர் வேளாண்மை அறிவியல் நிலையமும் இணைந்து சர்வதேச சிறுதானியங்கள் கண்காட்சியை நடத்தின. இந்த கண்காட்சி பெரியார் பல்கலைக்கழக கூட்ட அரங்கில் நடந்தது. பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.ஜெகன்நாதன் தலைமை தாங்கினார். பல்கலைக்கழக தாவரவியல் துறை தலைவர் செல்வம் வரவேற்றார்.

வேளாண்மை அறிவியல் நிலைய ஒருங்கிணைப்பாளர் ஜெகதாம்பாள் சிறு தானியங்கள் குறித்து அறிமுக உரை நிகழ்த்தினார். கண்காட்சியில் தானிய வகைகள், ராகி வகைகள், நவதானியங்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட தானியங்கள், பாரம்பரிய ஊட்டச்சத்து தானியங்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டு இருந்தன. வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பிலும் கண்காட்சி அரங்கு அமைக்கப்பட்டு இருந்தது. சிறுதானியங்களில் விதை உற்பத்தி தொடர்பான துண்டு பிரசுரங்கள், சிறு தானியங்களில் மதிப்பு கூடுதல் செய்யப்பட்ட பொருட்கள் கொண்ட சிறு புத்தகம் ஆகியன வைக்கப்பட்டிருந்தன. கண்காட்சி அரங்கினை தொழில்நுட்ப திட்ட உதவியாளர் செந்தில்நாதன் அமைத்திருந்தார். சந்தியூர் வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிறுதானியங்களில் செய்யப்பட்ட பிஸ்கட் வழங்கப்பட்டது. கண்காட்சி ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்கள் முருகேசன், அருள் பாலச்சந்திரன், மருது பாண்டியன், விரிவுரையாளர் பிரகாஷ் மற்றும் சந்தியூர் வேளாண் அறிவியல் நிலைய தொழில்நுட்ப வல்லுனர்கள் ஆனந்த், மாலதி, ரவி, கலைச்செல்வி, பிரதீபா உள்பட பலர் கலந்து கொண்டனர். சிறந்த கண்காட்சி அரங்கு அமைத்த விவசாயிகளுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் லலிதா நன்றி கூறினார்.


Next Story