சாலையோர வியாபாரிகள் மனு


சாலையோர வியாபாரிகள் மனு
x

சாலையோர வியாபாரிகள் மனு

திருப்பூர்

திருப்பூர்

திருப்பூர் மாவட்ட சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் (சி.ஐ.டி.யு.) மாவட்ட செயலாளர் பாலன் தலைமையில் நிர்வாகிகள் நேற்று திருப்பூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில், 'திருப்பூர் தெற்கு உழவர் சந்தை அருகில் 100 மீட்டர் தொலைவில் சாலை ஓரத்தில் பழங்களை வைத்து தினசரி காலை 4 மணி முதல் காலை 8 மணி வரை வியாபாரிகள் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு இல்லாமல் வியாபாரம் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் கடந்த மாதம் 29-ந் தேதி, கலெக்டர் அலுவலக அதிகாரிகள், ஆர்.டி.ஓ. அலுவலக அதிகாரிகள் அங்கு வந்து உழவர் சந்தை வியாபாரம் பாதிக்கப்படுவதாக கூறி 50-க்கும் மேற்பட்ட வியாபாரிகளை சாலை ஓரத்தில் கடை அமைத்து வியாபாரம் செய்யக்கூடாது என்று கூறினார்கள்.

உழவர் சந்தைக்கு 100 மீட்டர் தூரத்துக்கு அப்பால் உள்ள தனியார் கடைகளுக்கு முன் காலை 4 மணி முதல் காலை 8 மணி வரை, தனியார் கடை உரிமையாளர்கள் தங்கள் கடைகளுக்கு முன்னால் வியாபாரம் செய்ய அனுமதித்துள்ளனர். அதன்படி சாலையில் இருந்து 5 அடிக்கு உள்ளே போக்குவரத்து இடையூறு இன்றி வியாபாரம் செய்த சாலையோர கடைகளை மாநகராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்தி விட்டது. எனவே சாலையோர சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்' என்று கூறியுள்ளனர்.


----


Next Story