சின்னவெங்காயம் கிலோ ரூ.140-க்கு விற்பனை
வெள்ளகோவிலில் சின்னவெங்காயம் கிலோ ரூ.140-க்கு விற்பனை செய்யப்பட்டது.
வீ.மேட்டுப்பாளையம்
வெள்ளகோவிலில் ஞாயிற்றுக்கிழமை தோறும் வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த சந்தைக்கு சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் கிடைக்கும் காய்கறிகள் மற்றும் பயிர் வகைகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இதை பொதுமக்கள் மற்றும் நூல்மில்களில் தங்கி வேலை பார்க்கும் ஊழியர்கள் ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறிகள் மற்றும் மளிகை சாமான்களை வாங்கி செல்வார்கள்.
சந்தையில் நேற்று தக்காளி (ஒரு கிலோ)ரூ.100-க்கும், சின்னவெங்காயம் ரூ.140-க்கும், பெரியவெங்காயம் ரூ.30-க்கும், கேரட் ரூ.80-க்கும் பீட்ரூட் ரூ.70-க்கும், வெண்டைக்காய் ரூ.60-க்கும், உருளைக்கிழங்கு ரூ.30-க்கும், பீன்ஸ் ரூ.120-க்கும், இஞ்சி ரூ.270-க்கும், முட்டைக்கோஸ் ரூ.20-க்கும், பாகற்காய் ரூ.80-க்கும், அவரைக்காய் ரூ.120-க்கும், சுரைக்காய் ரூ.15-க்கும், கத்திரிக்காய் ரூ.80-க்கும், மல்லித்தழை ஒரு கட்டு ரூ.30-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இத்தகவலை சந்தை வியாபாரி சிவா தெரிவித்தார்.
============