புதிதாக போடப்பட்டு தார்சாலை பிய்ந்துவரும் அவலம்
புதிதாக போடப்பட்டு தார்சாலை பிய்ந்துவரும் அவலம்
திருப்பூர்
அவினாசி
அவினாசி ஒன்றியம் அய்யம்பாளையம் ஊராட்சியில் 2.கி.மீ தூரத்திற்கு ஊராட்சி ஒன்றியத்தின் மூலம் ரூ. 40 லட்சம் மதிப்பீட்டில்தார் சாலை அமைக்கப்பட்டது. அந்த ரோடு போடப்பட்ட சில நாட்களிலேயே பல இடங்களில் பெயர்ந்து விரிசல் விட்டுள்ளது. மேலும் அந்த இடங்களில் பள்ளம் விமுக்குள்ளது. கையில் தொட்டால் ரொட்டி துண்டு போல் கழன்று வருகிறது. இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் மக்கள் பயன்பாட்டிற்காக பல லட்சம் ரூபாய் செலவில் சாலைகள் அமைக்கப்படுகின்றன. ஆனால் அந்த ரோடு போடப்பட சில நாட்களிலேயே தரமற்று பெயர்ந்து நாசமாகியுள்ளது. தரமற்ற சாலையை அமைத்த ஒப்பந்ததார்மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
-
Related Tags :
Next Story