குறு வட்ட அளவிலான செஸ் போட்டிகள்


குறு வட்ட அளவிலான செஸ் போட்டிகள்
x

வேட்டவலத்தில் குறு வட்ட அளவிலான செஸ் போட்டிகள் நடந்தது.

திருவண்ணாமலை

வேட்டவலம்

பள்ளிக்கல்வித்துறை சார்பில் கீழ்பென்னாத்தூர் குறு வட்ட அளவிலான செஸ் போட்டிகள் வேட்டவலம் செயிண்ட் மேரீஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

குறு மைய செயலாளரும், பள்ளி தலைமை ஆசிரியருமான சின்னப்பராஜ் போட்டிகளை தொடங்கி வைத்தார். தாளாளர் ஆரோக்கியசாமி முன்னிலை வகித்தார். உதவி தலைமைஆசிரியர் பெலிக்ஸ் கஸ்பர் ராஜ் வரவேற்றார்.

11, 14, 17 மற்றும் 19 வயது என 4 பிரிவுகளில் மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

போட்டியின் நடுவர்களாக உடற்கல்வி இயக்குனர் சுரேஷ், உடற்கல்வி ஆசிரியர்கள் சீனிவாசன், கோபிநாத், சத்யன், கணேஷ்பாபு, ஜெரினா, மங்கள புனிதா, அன்பரசன், செவ்வராணி, சரஸ்வதி. மீரா, ஆல்வின், சந்தனம், டேவிட், ஆகியோர் கலந்து கொண்டனர்.

துணை குறு மைய செயலாளரும், உடற்கல்வி ஆசிரியருமான அந்தோணி சேவியர் நன்றி கூறினார்.


Related Tags :
Next Story