14 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள்


14 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள்
x

திசையன்விளை தாலுகாவில் 14 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகளை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்

திருநெல்வேலி

திசையன்விளை:

திசையன்விளை தாலுகாவிற்கு உட்பட்ட குண்டல், காரி கோவில், உவரி, கரைசுத்து உவரி, கூட்டப்பனை, வெம்மணங்குடி, கூடுதாழை, குருசன்விளை, குட்டம், தஞ்சபுரம், தோப்புவிளை ஆகிய கிராமங்களில் உள்ள தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளில் என ெமாத்தம் 14 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதனை சபாநாயகர் அப்பாவு நேற்று தொடங்கி வைத்தார்.

இதில் திசையன்விளை தாசில்தார் பத்மபிரியா, உவரி பங்குதந்தை டொமினிக் அருள்வளன், கரைசுத்து உவரி பஞ்சாயத்து துணைத்தலைவர் ராஜன் கிருபாநிதி, ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப்பெல்சி, நவ்வலடி சரவணகுமார், மீனவர் பேரவை மாநில செயலாளர் ஆல்டிரின் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

1 More update

Next Story