விவசாய கழிவுகளை தீவைத்து எரிப்பதால் புகை மூட்டம்


விவசாய கழிவுகளை தீவைத்து எரிப்பதால் புகை மூட்டம்
x

ராஜபாளையம் பகுதியில் விவசாய கழிவுகளை தீவைத்து எரிப்பதால் புகை மூட்டம் ஏற்படுகிறது.

விருதுநகர்

ராஜபாளையம்,

ராஜபாளையம் பகுதியில் விவசாய கழிவுகளை தீவைத்து எரிப்பதால் புகை மூட்டம் ஏற்படுகிறது.

உலர்கலங்கள்

ராஜபாளையம் நகர் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் உள்ள விவசாயிகள் தாங்கள் விளைச்சல் செய்யும் விளை பொருட்களை உலர வைக்க போதுமான இடம் இல்லாததால் சாலையில் கொட்டி உலர்த்தி வருகிறார்கள்.

இப்பகுதியில் கடந்த சில மாதங்களாக நெல், கரும்பு, வாழை, எள், மக்காச்சோளம் போன்ற பயிர்களை சாகுபடி செய்து அறுவடை செய்துள்ளனர். இப்பகுதியில் விளைபொருட்களை காய வைக்க உலர்கலங்கள் இல்லாததால் விவசாயிகள் சாலையில் கொட்டி உலர்த்தி வருகின்றனர். பின்னர் உலர்த்திய கழிவுகளை அகற்றாமல் தீவைத்து விடுகின்றனர். இதனால் சாலையில் புகை மூட்டம் ஏற்படுகிறது. ஆதலால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

கருகிய மரக்கன்றுகள்

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த செல்வகுமார் கூறியதாவது:-

ராஜபாளையம் முடங்கியார் சாலையில் வட்டாட்சியர் அலுவலகம் அருகே உள்ள சாலையில் எள் செடியினை காயவைத்தனர். பின்னர் எள் கழிவு செடிகளை அகற்றாமல் தீ வைத்து எரிப்பதை வாடிக்கையாக்கி உள்ளனர். இதனால் அந்த வழியாக நடைபயிற்சிக்கு செல்பவர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர்.

இவ்வாறு வைக்கும் தீ மின்கம்பியைத்தாண்டி எரிந்துகொண்டிருக்கிறது. நேற்று அதிகாலை முடங்கியார் சாலையில் கழிவுகளுக்கு தீ வைத்ததின் விளைவாக அங்கு இருந்த மரக்கன்றுகள் மொத்தமும் கருகியுள்ளது.

நடவடிக்கை

கடந்த ஆண்டு இதேமாதிரி எரிந்தபோது தீயணைப்பு வீரர்கள் வந்துதான் தீயை அணைத்தனர். ஆகையால் விபத்து ஏற்படாமல் இருக்க விவசாயிகளும் ஒத்துழைக்க வேண்டும்.

தவறு செய்பவர்கள் மீது சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story