ஆம்னி கார்களில் கடத்திய 2,200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்


ஓட்டப்பிடாரம் அருகே ௨ ஆம்னி கார்களில் கடத்திய 2,200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

மாவட்ட செய்திகள்

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரம் அருகே தூத்துக்குடி- மதுரை தேசிய நெடுஞ்சாலை, குறுக்குசாலை பகுதியில் ஓட்டப்பிடாரம் சப்-போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராஜா தலைமையில் போலீசார் நேற்று மாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இரு ஆம்னி கார்களை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் எப்போதும்வென்றானில் உள்ள ரைஸ்மில் ஒன்றிற்கு ரேஷன் அரிசி கடத்திச் சென்றது தெரியவந்தது. இதை அடுத்து ஆம்னி கார் டிரைவர் தூத்துக்குடி அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த பொன்ராஜ் மகன் இசக்கிவேல் (வயது 47), மாப்பிள்ளையூரணி பகுதியைச் சேர்ந்த அற்புதம் மகன் சவரிமுத்து (38) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் இரு ஆம்னி கார்கள் மற்றும் அதிலிருந்த 2ஆயிரத்து 200 கிலோ ரேஷன் அரிசியையும் போலீசார் பறிமுதல் செய்து தமிழ்நாடு உணவுப் பொருள் பாதுகாப்பு கழகத்தினரிடம் ஒப்படைத்தனர்.


Next Story