சொகுசு கார், மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தல்; பெண்கள் உள்பட 5 பேர் கைது


சொகுசு கார், மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தல்; பெண்கள் உள்பட 5 பேர் கைது
x

பட்டிவீரன்பட்டியில் சொகுசு கார், மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய வழக்கில் பெண்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல்

பட்டிவீரன்பட்டியில் சொகுசு கார், மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய வழக்கில் பெண்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

கஞ்சா கடத்தல்

வெளிமாநிலத்தில் இருந்து பட்டிவீரன்பட்டிக்கு சொகுசு காரில் கஞ்சா கடத்தி வருவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பட்டிவீரன்பட்டி-அய்யங்கோட்டை சாலையில் தனிப்படை போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சொகுசு கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர்.

உடனே அவர்களை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். பின்னர் அவர்கள் வந்த கார் மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் சோதனை செய்தனர். அப்போது, காரில் 40 கிலோ கஞ்சாவும், மோட்டார் சைக்கிளில் 20 கிலோ கஞ்சாவும் இருப்பதை கண்டுபிடித்தனர். மேலும் ஒரே கும்பலான அவர்கள், வெளிமாநிலத்தில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது.

5 பேர் கைது

மேலும் விசாரணையில், காரை ஓட்டி வந்தவர் பட்டிவீரன்பட்டியை சேர்ந்த சக்திவேல் (வயது 28) என்பதும், மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் ஜெயநாயக்கன்பட்டியை சேர்ந்த சக்சேனா ஸ்ரீபால் சேர்த்தனா (25) என்பதும் தெரியவந்தது. மேலும் இவர்கள் 2 பேரும் வெளிமாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்து விற்பனைக்காக மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியை சேர்ந்த தனலட்சுமி (50), ராஜாத்தி (58), நாகபாண்டி (30) ஆகியோரிடம் கொடுத்துள்ளனர். அவர்கள் கஞ்சாவை விற்பனை செய்து வந்தனர்.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கஞ்சா கடத்திய சக்திவேல், சக்சேனா ஸ்ரீபால் சேர்த்தனா மற்றும் கஞ்சா விற்ற தனலட்சுமி உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 60 கிலோ கஞ்சா மற்றும் சொகுசு கார், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story