ஆந்திராவில் இருந்து கேரளாவிற்கு சரக்கு வேனில் கஞ்சா கடத்தல்


ஆந்திராவில் இருந்து கேரளாவிற்கு சரக்கு வேனில் கஞ்சா கடத்தல்
x

ஆந்திராவில் இருந்து கேரளாவிற்கு சரக்கு வேனில் கஞ்சா கடத்திய 3 பேரை போலீசார் வாகனசோதனையின் போது கைது செய்தனர்.

கரூர்

வாகன சோதனை

கரூர் மாவட்டத்திற்கு கஞ்சா, குட்கா, வெளிமாநில மதுபாட்டில்கள் கடத்தி வருவதை தடுக்கும் வகையில் மாவட்ட எல்லை பகுதிகளில் போலீசார் வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி நேற்று முன்தினம் மாலை சின்னத்தாராபுரம் போலீஸ் நிலையம் பகுதிக்குட்பட்ட பெரிய திருமங்கலம் பிரிவு சாலையில் அரவக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக எருமை மாடுகளை ஏற்றி வந்த சரக்கு வேனை நிறுத்தி சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் சோதனை நடத்தினர்.

3 பேர் கைது

அப்போது ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து கேரளாவிற்கு எருமை மாடுகளை ஏற்றி வந்த சரக்கு வேனில், 2 வெள்ளை சாக்குகளில் சுமார் 42 கிலோ கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ.21 லட்சம் ஆகும். இதையடுத்து 42 கிலோ கஞ்சாவை, சரக்கு வேனுடன் போலீசார் பறிமுதல் செய்தனர்.மேலும் கஞ்சாவை கடத்தி வந்ததாக சரக்கு வேன் டிரைவர் தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே உள்ள சுருளி ரோடு பகுதியை சேர்ந்த கவுதம் (வயது 27), ராம்குமார் (29), கரண்குமார் (23) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.இது குறித்து மேலும் போலீசார் கூறுகையில் சட்ட விரோதமான போதை பொருட்களை யாரேனும் கடத்தி வந்தாலோ விற்பனை செய்வதாக தகவல் தெரிந்தாலோ உடனடியாக கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அவர்களின் தொலைபேசி எண் 9498188488 ல் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என தெரிவித்தனர்.


Next Story