மினி லாரியில் ரேஷன் அரிசி கடத்தல்; 2 பேர் சிக்கினர்
அம்பை அருகே மினி லாரியில் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் சிக்கினர்.
திருநெல்வேலி
நெல்லை குடிமை பொருள் குற்ற புலனாய்வுத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா, சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் போலீசார் அம்பை அருகே உள்ள இடைகால் விலக்கு பகுதியில் நேற்று வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த மினி லாரியில் சோதனை செய்தனர்.
அதில் 50 மூடைகளில் 2 டன் ரேஷன் அரிசி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தென்காசி மாவட்டம் மயிலப்பபுரத்தை சேர்ந்த லாரி டிரைவர் செல்லதுரை (வயது 38), உதவியாளர் சாலமன் ராஜ் (45) ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் ரேஷன் அரிசி, மினி லாரி, ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதுதவிர மாறாந்தையை சேர்ந்த இளையராஜா என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story