காரில் புகையிலை பொருட்கள் கடத்தல்


காரில் புகையிலை பொருட்கள் கடத்தல்
x
தினத்தந்தி 23 July 2023 1:30 AM IST (Updated: 23 July 2023 5:22 PM IST)
t-max-icont-min-icon

காரில் புகையிலை பொருட்கள் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

தேனி

கம்பம் வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா தலைமையிலான போலீசார், கம்பம் மணிகட்டி ஆலமரம் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது வழியாக வந்த காரை போலீசார் நிறுத்தினர். அப்போது காரில் இருந்த ஒருவர் போலீசாரை கண்டதும் அதில் இருந்து இறங்கி தப்பியோடிவிட்டார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் காரில் இருந்த மற்றொருவரை மடக்கி பிடித்தனர்.

இதையடுத்து காருக்குள் போலீசார் சோதனை செய்தனர். அப்போது அதனுள் 3 சாக்கு மூட்டைகளில் 41 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் பிடிபட்ட நபரிடம் விசாரித்தபோது, அவர் கம்பம் முகைதீன் ஆண்டவர்புரம் தெருவை சேர்ந்த முகமது ஆசிக் (வயது 40) என்பதும், தப்பி ஓடியவர் அப்துல் காதர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது ஆசிக்கை கைது செய்தனர்.

அவரிடம் இருந்து கார் மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தப்பிஓடிய அப்துல்காதரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Related Tags :
Next Story