மருத்துவ குணம் கொண்ட நத்தை கிலோ ரூ.300-க்கு விற்பனை


மருத்துவ குணம் கொண்ட நத்தை கிலோ ரூ.300-க்கு விற்பனை
x

அதிராம்பட்டினத்தில் மருத்துவ குணம் கொண்ட நத்தை கிலோ ரூ.300-க்கு விற்பனையாகிறது.

தஞ்சாவூர்

அதிராம்பட்டினம்:-

அதிராம்பட்டினத்தில் மருத்துவ குணம் கொண்ட நத்தை கிலோ ரூ.300-க்கு விற்பனையாகிறது.

நத்தை

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதி கடலோர பகுதியாகும். இங்கு பிடிபடும் மீன்கள் பல்வேறு ஊர்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. அதேபோல நண்டு, இறால் உள்ளிட்ட கடல் உணவு பொருட்களும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

அதிராம்பட்டினம் பகுதியில் உள்ள ஏரிகளில் மருத்துவ குணம் கொண்ட நத்தைகள் அதிக அளவில் கிடைக்கின்றன. தற்ேபாது இந்த பகுதியில் நத்தைக்கான சீசன் தொடங்கி உள்ளது. பெரும்பாலும் சேறு, மணல் சார்ந்த பகுதிகளில் நத்தை வாழ்கிறது.

மருத்துவ குணம்

மருத்துவ குணம் கொண்டிருப்பதால் இவற்றை மக்கள் விரும்பி வாங்கிச்சென்று சமைத்து சாப்பிடுகிறார்கள்.

தற்போது அதிராம்பட்டினம் அருகே உள்ள மகிழங்கோட்டை, மழவேனிற்காடு, கருங்குளம், கீழத்தோட்டம் ஆகிய பகுதிகளில் உள்ள ஏரி, குளங்களில் தண்ணீர் வற்றி இருப்பதால் அங்கு நத்தை அதிகளவில் பிடிபட்டு வருகிறது. நத்தை பிடிக்கும் பணியில் பலர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ரூ.300-க்கு விற்பனை

இங்கு பிடிபடும் மருத்துவ குணம் கொண்ட நத்தை கிலோ ரூ.300-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நத்தை கூட்டை உடைத்து கறி மட்டும் தனியாக கிலோ ரூ.500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், 'நத்தை மருத்துவகுணம் கொண்டது. நீண்ட நாட்களாக உள்ள இடுப்பு வலியை குணப்படுத்தும். பெண்களுக்கு வரும் உஷ்ணம் மற்றும் மூலம் சம்பந்தமான வியாதிகளுக்கு நத்தை அருமருந்தாகும். மருத்துவ குணம் கொண்டது என்பதால் மக்கள் ஆர்வமாக வாங்கி செல்கின்றனர்.


Next Story