கிருஷ்ணகிரி அருகே 10 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது


கிருஷ்ணகிரி அருகே  10 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது
x

கிருஷ்ணகிரி அருகே 10 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அருகே உள்ளது போத்திநாயனப்பள்ளி. இங்குள்ள விவசாய நிலத்தில் 10 அடி நீள மலைப்பாம்பு ஒன்று இருந்தது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். இந்த நிலையில் அங்குள்ள இளைஞர்கள் மற்றும் கிராம மக்கள் சேர்ந்து அந்த மலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர் அவர்கள் அந்த மலைப்பாம்பை ஒரு சாக்குப்பையில் போட்டு கட்டி மகராஜகடை அருகே உள்ள நாரலப்பள்ளி வனப்பகுதியில் விட்டனர். கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக அந்த பகுதியில் சுற்றி அச்சுறுத்தி வந்த மலைப்பாம்பு பிடிக்கப்பட்டதால் கிராம மக்கள் நிம்மதி அடைந்தனர்.


Next Story