கோபியில் 5 அடிநீள நாகப்பாம்பு பிடிபட்டது
கோபியில் 5 அடிநீள நாகப்பாம்பு பிடிபட்டது
ஈரோடு
கடத்தூர்
கோபி அருகே உள்ள மொடச்சூர் கல்ராமணியை சேர்ந்தவர்் வெங்கட்ராமன். இவருடைய வீட்டில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக அடுக்கி வைக்கப்பட்டு இருந்த சிமெண்டு குடோனில் ஒரு நாகப்பாம்பு ஊர்ந்து சென்றது. அதைப்பார்த்து தொழிலாளர்கள் பயந்து ஓடினார்கள். இதுபற்றி கோபி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் நாகப்பாம்பை லாவகமாக பிடித்து ஒரு சாக்குப்பையில் போட்டார்கள். அது சுமார் 5 அடி நீளம் இருந்தது. பின்னர் பிடிபட்ட பாம்பு வனப்பகுதியில் விடுவதற்காக கொண்டு செல்லப்பட்டது.
Related Tags :
Next Story