பாலக்கோடு அருகே விவசாய நிலத்தில் கிடந்த மலைப்பாம்பு பிடிபட்டது
பாலக்கோடு அருகே விவசாய நிலத்தில் கிடந்த மலைப்பாம்பு பிடிபட்டது
தர்மபுரி
பாலக்கோடு:
பாலக்கோடு அருகே சந்திராபுரம் கிராமத்தில் விஜய் (வயது 40) என்பவர் தனது 2 ஏக்கர் விவசாய நிலத்தில் நிலக்கடலை பயிரிட்டிருந்தார். இந்த நிலையில் நேற்று காலை விஜய் மனைவி தீபா தோட்டத்துக்கு சென்றபோது அங்கு சுமார் 15 அடி நீளமுள்ள மலைப்பாம்பு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டார். இதை கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு ஓடி வந்தனர். இதுகுறித்து உடனடியாக பாலக்கோடு வன துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் வனச்சரகர் நடராஜ் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விவசாய நிலத்தில் கிடந்த மலைப்பாம்பை பிடித்து திருமல்வாடி வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர்.
Related Tags :
Next Story