ராசிபுரம் அருகே விவசாய தோட்டத்தில் மலைப்பாம்பு பிடிபட்டது


ராசிபுரம் அருகே  விவசாய தோட்டத்தில் மலைப்பாம்பு பிடிபட்டது
x
தினத்தந்தி 17 Nov 2022 12:30 AM IST (Updated: 17 Nov 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

ராசிபுரம் அருகே விவசாய தோட்டத்தில் மலைப்பாம்பு பிடிபட்டது

நாமக்கல்

ராசிபுரம்:

ராசிபுரம் அருகே உள்ள மொஞ்சனூர் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன். விவசாயி. இவர் நேற்று தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது 15 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று மெதுவாக ஊர்ந்து சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ராசிபுரம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் வனத்துறையினர் விரைந்து சென்று 2 மணி நேரத்திற்கு மேலாக போராடி மலைப்பாம்பை உயிருடன் பிடித்தனர். பின்னர் அருகில் உள்ள அடர்ந்த வனப்பகுதிக்கு மலைப்பாம்பை கொண்டு சென்று விட்டனர்.


Next Story