தாளவாடி அருகே ரோட்டில் ஊர்ந்த 10 அடி நீள மலைப்பாம்பு
தாளவாடி அருகே ரோட்டில் ஊர்ந்த 10 அடி நீள மலைப்பாம்பு
ஈரோடு
தாளவாடி
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஜீர்கள்ளி வனச்சரகத்துக்கு உள்பட்ட குன்னன்புரம் அருகே உள்ள சாலையில் இருசக்கர வாகனத்தில் சிலர் சென்று கொண்டிருந்தனர். அப்போது ரோட்டில் ஏதோ நெளிந்து சென்று கொண்டிருந்தது.
இதனால் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு் கீழே இறங்கி பார்த்தனர். அப்போது அது மலைப்பாம்பு என்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்தனர். உடனே இதுபற்றி அருகே உள்ள ஜீர்கள்ளி வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து வனத்துறையினர் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் மலைப்பாம்பை லாவகமாக பிடித்து ஒரு சாக்குப்பையில் போட்டனர். பிடிபட்ட மலைப்பாம்பு 10 அடி நீளம் என்று தெரிவித்தனர். இதையடுத்து மலைப்பாம்பை அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.
Related Tags :
Next Story