தாளவாடி அருகே தோட்டத்தில் புகுந்த 15 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது


தாளவாடி அருகே தோட்டத்தில் புகுந்த 15 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது
x

தாளவாடி அருகே தோட்டத்தில் புகுந்த 15 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது.

ஈரோடு

தாளவாடி

தாளவாடி அருகே தோட்டத்தில் புகுந்த 15 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது.

மலைப்பாம்பு

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள இக்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சென்னாஞ்சப்பா. விவசாயி. இவரது வீட்டையொட்டி தோட்டம் உள்ளது. இங்கு அவர் மஞ்சள் சாகுபடி செய்துள்ளார். இந்த நிலையில் சென்னாஞ்சப்பா நேற்று பகல் 11 மணி அளவில் தனது தோட்டத்துக்கு சென்று வேலை செய்து கொண்டு இருந்தார். அப்போது அங்கு ஒரு பெரிய மலைப்பாம்பு ஒன்று படுத்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே இதுபற்றி தாளவாடி வனத்துறைக்கு தகவல் கொடுத்தார்.

வனத்துறையினர்

அதைத்தொடர்ந்து வனத்துறையினர் அங்கு சென்று மலைப்பாம்பை லாவகமாக பிடித்து ஒரு சாக்குப்பையில் போட்டனர். இதுபற்றி வனத்துறையினர் கூறும்போது, 'பிடிபட்டது 15 அடி நீள மலைப்பாம்பு ஆகும். இது அருகே உள்ள தாளவாடி வனப்பகுதியில் இருந்து தோட்டத்துக்கு வந்துள்ளது' என்றனர்.

பின்னர் வனத்துறையினர் அந்த மலைப்பாம்பை அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு போய் விட்டனர்.


Next Story