அந்தியூர் அருகே கண்ணாடி விரியன் பாம்பு பிடிபட்டது


அந்தியூர் அருகே கண்ணாடி விரியன் பாம்பு பிடிபட்டது
x

அந்தியூர் அருகே கண்ணாடி விரியன் பாம்பு பிடிபட்டது

ஈரோடு

அந்தியூர்

அந்தியூர் அருகே உள்ள மைக்கேல்பாளையம் சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் சாந்தி. இவர் தனது வீட்டு முன்பு பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வதை பார்த்துள்ளார். இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனே இதுபற்றி அவர் அந்தியூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். அதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று பாம்பை லாவகமாக பிடித்தனர். பிடிபட்டது சுமார் 2 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு என்று தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். பின்னர் பிடிப்பட்ட பாம்பு அந்தியூர் வனப்பகுதியில் கொண்டு சென்று விடப்பட்டது.


Next Story